குறள் : 636

மதிநுட்ப நூலோ டுடையார்க் கதிநுட்பம்
யாவுள முன்னிற் பவை

மு.வ உரை :

இயற்கையான நுட்ப அறிவை நூலறிவோடு ஒருங்கே உடையவர்க்கு மிக்க நுட்பமான சூழ்ச்சிகளாய் முன் நிற்பவை எவை உள்ளன.

கலைஞர் உரை :

நூலறிவுடன் இயற்கையான மதி நுட்பமும் உள்ளவர்களுக்கு முன்னால் எந்த சூழ்ச்சிதான் எதிர்த்து நிற்க முடியும்? முடியாது.

சாலமன் பாப்பையா உரை :

இயல்பான நுண்ணறிவோடு செயற்கை ஆகிய நூல் அறிவையும் உடைய அமைச்சருக்கு எதிராக, மிகுந்த நுட்பமான சூழ்ச்சிகள் என்று எவை நிற்கமுடியும்?.

Kural 636

Madhinutpam Noolotu Utaiyaarkku Adhinutpam
Yaavula Munnir Pavai

Explanation :

What (contrivances) are there so acute as to resist those who possess natural acuteness in addition to learning ?.

Horoscope Today: Astrological prediction for January 19, 2022

இன்றைய பஞ்சாங்கம்

19-01-2022, தை 06, புதன்கிழமை, பிரதமை திதி காலை 06.54 வரை பின்பு தேய்பிறை துதியை. பூசம் நட்சத்திரம் காலை 06.42 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. நவகிரக வழிபாடு நல்லது. 

இராகு காலம்

மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00


Today rasi palan - 19.01.2022

இன்றைய ராசிப்பலன் - 19.01.2022

மேஷம்

இன்று குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும். வண்டி வாகனங்களால் வீண் விரையங்கள் ஏற்படும். கூட்டாளிகளின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். திருமண பேச்சுவார்த்தைகள் சாதகமான பலனை கொடுக்கும்.

ரிஷபம்

இன்று உறவினர்களின் திடீர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்ற நிலை உருவாகும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை தரும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழும் வாய்ப்பு அமையும்.

மிதுனம்

இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் குறையும். உறவினர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும்.

கடகம்

இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடும். தொழிலில் ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெண்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

சிம்மம்

இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த கடனுதவி கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வது உத்தமம். உங்களின் புதிய முயற்சிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். தெய்வ வழிபாடு நல்லது.

கன்னி

இன்று பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உற்றார் உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் பெண்களுக்கு வேலைபளு குறையும். புதிய பொருள் சேரும். சுபகாரியங்கள் கைகூடும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும். மன நிம்மதி ஏற்படும்.

துலாம்

இன்று குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். கொடுத்த கடன்கள் திரும்ப கிடைக்கும். சேமிப்பு உயரும்.

விருச்சிகம்

இன்று உறவினர்கள் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். குடும்பத்தினரின் மாற்று கருத்துக்களால் மன நிம்மதி குறையும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. 

தனுசு

இன்று குடும்பத்தில் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றும். உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது நல்லது. வெளியில் வாகனங்களில் செல்லும் போது நிதானத்துடன் செல்ல வேண்டும்.

மகரம்

இன்று உங்களுக்கு பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும். தொழில் ரீதியாக பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெற்று கடன் பிரச்சினைகள் குறையும்.

கும்பம்

இன்று இல்லத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். குடும்பத்துடன் வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் காணப்படும். தொழில் ரீதியான பயணங்களில் அனுகூலமான பலன் உண்டாகும். பழைய கடன்கள் வசூலாகும். எதிர்பார்த்த உதவி கிட்டும்.

மீனம்

இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் காலதாமதம் ஏற்படும். நெருங்கியவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது.

கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,