குறள் : 637
செயற்கை அறிந்தக் கடைத்து முலகத்
தியற்கை அறிந்து செயல்
மு.வ உரை :
நூலறிவால் செயலைச் செய்யும் வகைகளைச் அறிந்த போதிலும் உலகத்தின் இயற்கையை அறிந்து அதனோடு பொருந்துமாறு செய்யவேண்டும்.
கலைஞர் உரை :
செயலாற்றல் பற்றிய நூலறிவைப் பெற்றிருந்தாலும், உலக நடைமுறைகளை உணர்ந்து பார்த்தே அதற்கேற்றவாறு அச்செயல்களை நிறைவேற்ற வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை :
பல்வேறு மொழி நாட்டு நூல்களின் வழி, புதிய செயல் திறங்களை அறிந்திருந்தாலும், தன் நாட்டின் இயற்கை மக்கள் இயல்பு ஆகியவற்றை அறிந்து அவற்றிற்கு ஏற்பச் செய்க.
Kural 637
Seyarkai Arindhak Kataiththum Ulakaththu
Iyarkai Arindhu Seyal
Explanation :
Though you are acquainted with the (theoretical) methods (of performing an act) understand the ways of the world and act accordingly.
Today rasi palan - 20.01.2022
இன்றைய பஞ்சாங்கம்
20-01-2022, தை 07, வியாழக்கிழமை, துதியை திதி காலை 08.05 வரை பின்பு தேய்பிறை திரிதியை. ஆயில்யம் நட்சத்திரம் காலை 08.24 வரை பின்பு மகம். சித்தயோகம் காலை 08.24 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம்
மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
இன்றைய ராசிப்பலன் - 20.01.2022
மேஷம்
இன்று குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை ஏற்படும். அலுவலகத்தில் மேலதிகாரிகளால் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் லாபம் கிட்டும். உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.
ரிஷபம்
இன்று தொழில் சம்பந்தமாக நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் அதிகாரிகளால் மனஉளைச்சல்கள் உண்டாகும். பிள்ளைகள் வழியில் வீண் செலவுகள் ஏற்படும். உறவினர்கள் உதவியால் பொருளாதார ரீதியான பிரச்சினைகள் சற்று குறையும்.
மிதுனம்
இன்று குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த உதவிகள் தடையின்றி கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். ஆன்மீக மற்றும் தெய்வ வழிபாடுகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும்.
கடகம்
இன்று குடும்பத்தில் தேவையற்ற செலவுகள் உண்டாகும். உறவினர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் தோன்றும். வியாபார ரீதியான பயணத்தால் அலைச்சல்கள் ஏற்படலாம். நெருங்கியவர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று கடன்கள் குறையும்.
சிம்மம்
இன்று நீங்கள் எந்த வேலையிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். வாகனங்களால் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும்.
கன்னி
இன்று நீங்கள் எடுத்த காரியத்தை முடிப்பதற்கு சில இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் பெண்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் தாமதப் பலன் ஏற்படும். வேலையில் சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்.
துலாம்
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக வராத கடன்கள் வசூலாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மனைவி மூலமாக இன்று நல்லது நடக்கும். வேலையில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் நல்ல ஒற்றுமை நிலவும். வீட்டின் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். சிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். பிள்ளைகளால் பெருமை சேரும்.
தனுசு
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படலாம். உங்கள் ராசிக்கு காலை 08.24 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை. மதியத்திற்கு பிறகு மன அமைதி உண்டாகும். பொருளாதார நெருக்கடிகள் சற்று குறைந்து உங்களது தேவைகள் பூர்த்தியாகும்.
மகரம்
இன்று உங்கள் ராசிக்கு காலை 08.24 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருந்தால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பயணங்களை தள்ளி வைக்கவும்.
கும்பம்
இன்று நீங்கள் செய்யும் வேலைகளில் ஆர்வத்தோடு ஈடுபடுவீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.
மீனம்
இன்று உங்களுக்கு காலையிலே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். சிலருக்கு தொழில் ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,