இனி சீசன் டிக்கெட்கள் பெற தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்!
நாளை முதல் புறநகர் ரயிலில் பயணிக்க 2 டோஸ் தடுப்பூசி கட்டாயம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் பயணிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர சீசன் டிக்கெட்டுகளில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் எண் இடம்பெறும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ரயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'திங்கள்கிழமை முதல் தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு, புறநகர்ப் பகுதிகளில் பயணிக்கும் அனைத்துப் பயணிகளுக்கும் கட்டாய தடுப்பூசிச் சான்றிதழ் விதியை ரயில்வே சென்னைக் கோட்டம் செயல்படுத்தும். அதன்படி கோவிட் தடுப்பு மருந்து முழுமையாக செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே சென்னை புறநகர் ரயிலில் சீசன் டிக்கெட் வழங்கப்படும். சென்னை புறநகர் ரயில் பயணிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர சீசன் டிக்கெட்டுகளில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் எண் இடம்பெறும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.