ராணிப்பேட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் சோளிங்கர் எம் எல்ஏ. முனிரத்தினம் தலைமையில், மாவட்ட தலைவர் பஞ்சாட்சாரம், நகர காங்கிரஸ் தலைவர் அண்ணாதுரை மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகம் வந்தனர். அங்கு அவர்கள் கலெக்டரை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில்ல கூறி யிருப்பதாவது:

கலெக்டர் மூலமாக கவர்னருக்கு மனு அளிப்பதாகவும், பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் பொதுபொதுக்கூட்டத்தில் பங்கேற்க முடியாததற்கு பிரதமரின் பாதுகாப்பு அலுவலர்களே காரணம். பஞ்சாப் அரசு அல்ல. டெல்லியில் கூடிய விவசாயிகளை மத்திய அரசே கட்டுப்படுத்த முடியாத நிலையில் பஞ்சாப்பில் மாநில காங்கிரஸ் அரசு விவசாயிகளை எப்படி கட்டுப்படுத்த முடியும். வரும் தேர்தலை வைத்து பாஜ அரசியல் செய்கிறது. காங்கிரஸ் அரசை கலைப் பதற்கு மத்திய அரசு சதி செய்கிறது. ஆகவே அதை தடுத்து நிறுத்த வேண்டும். என்றும் கோரியிருந்தனர்.