காவேரிப்பாக் கம் அருகே வட்டார அளவிலான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெறுகிறது.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், தீனதயாள் உபாத்யாய ஊரக கவுசல்ய யோஜனா திட்டம் மூலம், வட்டார அளவில் மாபெரும் வேலைவாய்ப்பு மற்றும் வேலை வாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாடு பயிற்சி முகாம் காவேரிப்பாக்கம் அடுத்த ஓச்சேரி பகுதியில் உள்ள எஸ்.கே.மஹாலில் நாளை(4ம் தேதி) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறுகிறது.
ராணிப்பேட்டை மாவட்ட ஊரக பகுதிகளை சேர்ந்த வேலை வாய்ப்பற்ற 18 வயது நிரம்பிய ஆண், பெண், இருபாலர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு, பல்வேறு தனியார் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கும் பொருட்டு இம்முகாம் நடைபெறுகிறது.
இதில், படிக்காத மற்றும் 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐடிஐ. பாலிடெக்னிக், பிஇ. படித்த இருபாலரும் உரிய சான்றுகளுடன் கலந்து கொள்ளலாம். முகாமிற்கு வரும்போது கல்வி சான்று, குடும்ப அட்டை நகல், ஆதார், சாதி சான்று மற்றும் புகைப்படம் ஆகிய நகல் சான்றுகளுடன் வர வேண்டும். அனை வரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு வட்டார இயக்க வேளாண்மை அலுவலகம். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்), காவேரிப்பாக்கம் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.