கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வரும் ஞாயிற்றுக்கிழமையும் (23.01.22) முழு ஊரடங்கு அமல்படுத்துவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 
மேலும் முழு ஊரடங்கில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதாகவும், முழு ஊரடங்கில் பயணிகளின் நலன் கருதி சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், கோயம்பேடு பேருந்து நிலையம் போன்ற இடங்களில் ஆட்டோக்கள், செயலி மூலம் முன்பதிவு செய்து இயக்கப்படும் வாடகை கார்கள் பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.