முசுமுசுக்கை தோசை
தேவையான பொருள்கள் : | அளவு |
---|---|
முசுமுசுக்கைக் கீரை | ஒரு கைப்பிடி |
ஏலக்காய் | 2 |
சீரகம் | 10 கிராம் |
மிளகு | 5 |
தோசை மாவு | 7 கரண்டி |
முட்டை | 1 (வெள்ளைக் கரு மட்டும்) |
உப்பு | தேவையான அளவு |
செய்முறை :
முசுமுசுக்கைக் கீரை, ஏலக்காய், சீரகம், மிளகு அனைத்தையும் முட்டையின் வெள்ளைக் கருவோடு சேர்த்து விழுதாக அரைத்து தோசை மாவுடன் கலந்து, உப்பைச் சேர்த்து தோசை வார்க்கவும்.
நெஞ்சில் உறைந்து கிடக்கும் கபம் அடியோடு வெளிப்படும். வறட்டு
இருமலும், தலைவலியும் உடனே தீரும்.