வாலாஜாபேட்டை நகராட்சி பூங்கா பின்புறம் உள்ள ஆண்டியப்பன் தெருவைச் சேர்ந்தவர்கள் ராஜநாகம்-சுசித்ரா (28) தம்பதியினர். இவர்களுக்கு மேகா ஸ்ரீ (6), மித்ரன் (2) என 2 குழந்தைகள் உள்ளனர்.
பெங்களூரில் உள்ள சாப்ட்வேர் கம்பெனி ஒன்றில், இன்ஜினியராக ராஜ நாகம் பணிபுரிந்து வருகிறார். இதனால் சுசித்ரா, தனது மாமனார், மாமியாருடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், சுசித்ரா நேற்று முன்தினம் இரவு திடீரென இறந்து விட்டதாக, அவருடைய பெற்றோருக்கு தகவல் கிடைத்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், அங்கு சென்று சுசித்ரா உடலை பார்த்து கதறி அழுதனர். தொடர்ந்து, தங்கள் மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் அளித்தனர்.
அதன்பேரில், வாலாஜாபேட்டை போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். இதில், சுசித்ரா தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக, அவருடைய மாமியார் தரப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சுசித்ரா வின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் அறிக்கை வந்தபிறகே, சுசித்ரா இறப்பு கொலையா, தற்கொலையா என தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.