ராணிப்பேட்டை அடுத்த வானாபாடியை சேர்ந்தவர் தெய்வானை (60), கால்நடைகள் வைத்து பராமரித்து வருகிறார். இவரின் பசுமாடு நேற்று மாலை வானாபாடி அருகே உள்ள மைதானத்தில் மேய்ந்து கொண்டிருந்தது.

அப்போது மின்வயர் ஒன்றை மாடு மிதித்து விட்டதாக கூறப்படுகிறது. இதில் மின்சாரம் பாய்ந்து துடிதுடித்து அதே இடத்தில் பசு இறந்தது. இந்த சம்பவம் குறித்து சிப்காட் சப்-இன்ஸ்பெக்டர் ஜான் சேவியர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.