ராணிப்பேட்டை மாவட்டம் வேகாமங்கலம் பஜனை கோயில் தெரு வைச்சேர்ந்த பாண்டி (48), டாஸ்மாக் ஊழியர். இவர் தனது மனைவி, மகன்கள், மகளுடன் நேற்று ராணிப்பேட்டை எஸ்பி அலுவலகம் வந்தார். அங்கு அவர், தான் 2019ம் ஆண்டில் வீடு கட்ட பல நபர்களிடம் ரூ. 75 லட்சம் வரை கடன் வாங்கியதா கவும், இதுவரை வட்டியுடன் ரூ.2.5 கோடிவரை திருப்பி செலுத்தியும் கடன் தீரவில்லை. கந்து வட்டி, மீட்டர் வட்டி என்று கணக்கு போட்டு மேலும் பணம் கேட்கிறார்கள்.

இதுகுறித்து டிஐஜி அலுவலகத்தில் புகார் செய்ததால் ஆத்திர மடைந்த அவர்கள் தனது வீட்டில் அதிரடியாய் புகுந்து கார், பைக் மற்றும் வீட்டில் இருந்த விலை உயர்ந்த பொருட்கள், சான்றிதழ்களை அள்ளிச்சென்று விட்டனர். மேலும் கொலை மிரட்டல் விடுக் கின்றனர். கூலிப்படையை வைத்து தேடுகின்றனர்.

அவர்கள் கேட்கும் பணத்தை என்னால் கொடுக்க இயலாது. கடன் கொடுத்தவர்களுக்கு பயந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறேன். குடும்பத்துடன் தற்கொலைசெய்து கொள்வதை தவிர வேறு வழி தெரிய வில்லை அவர்களிட மிருந்து பாதுகாக்க வேண்டுமென எஸ்பியிடம் மனு அளித்தார்.