இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் மோட்டார் சைக்கிள்களைத் தயாரிக்கும் நிறுவனங்களின் வரிசையில் முதலிடத்தில் உள்ள ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் இளம் தலைமுறையினரைக் கவரும் வகையில் எக்ஸ்.பல்ஸ். 200 டி(X Plus 200T) மாடல் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.

இது 200 சி.சி. திறன் கொண்ட 4 வால்வு ஆயில் கூல்டு என்ஜினைக் கொண்டது. முந்தைய மாடலைக் காட்டிலும் 6 சதவீதம் கூடுதல் சக்தியும், 5 சதவீதம் டார்க் இழுவிசையையும் கூடுதலாகக் கொண்டது. எல்.சி.டி. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளது. புளூடூத் இணைப்பு வசதி, கியர் இன்டிகேட்டர், டிரிப் மீட்டர், சர்வீஸ் காலம் ஆகிய வற்றையும் உணர்த்தும். இதனால் எவ்வித இடையூறுமின்றி வாகனம் செயல்பட வழியேற்பட்டுள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.1,25,726.

இது பாரத் 6 விதிமுறைகளுக்கேற்ப என்ஜினைக் கொண்டது. 19.1 பி.எஸ். திறனை 8,500 ஆர்.பி.எம். சுழற்சியிலும், 17.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 6,500 ஆர்.பி.எம். சுழற்சியிலும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர் பாக்ஸை கொண்டது. நீண்ட தூரம் சொகுசாக பயணிக்க விரும்புவோருக்கு ஏற்ற வகையிலான வடிவமைப்பு கொண்டது.