திருமணம், குடும்பம்,குழந்தை என இடையில் நடிப்புக்கு ஓய்வு கொடுத்து இருந்த நடிகை காஜல் அகர்வால் தற்போது மீண்டும் முழுவீச்சில் நடிப்புக்கு திரும்பியுள்ளார். 

அதே சமயம் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக வலம் வரும் காஜல் அகர்வால் தனது குழந்தையின் ஒவ்வொரு மாத வளர்ச்சியையும் தாய்மை உணர்வுடன் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கையில் குழந்தையை வைத்து இருக்கும் கணவருக்கு 'லிப் லாக்' முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

இப்புகைப்ப டம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.