பிரான்ஸைச் சேர்ந்த சிட்ரோயன் நிறுவனம் சர்வதேச அளவில் மிகவும் பிரபலமானது. நூறாண்டு பாரம்பரிய மிக்க இந்நிறுவனம் தற்போது சிட்ரோயன் சி 3 மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்தக் கார் காம்பாக்ட் ஹேட்ச்பேக் செக்மென்டில் வந்துள்ளது. ஆனால் பார்ப்பதற்கு இது எஸ்.யு.வி. போன்ற தோற்றமுடையது.

இதன் செயல்பாடு, சிறப்பான வடிவமைப்பு காரணமாக ஜக்ரான் ஹைடெக் விருது, ஹேட்ச் பேக் ஆப் தி இயர், ஜீ ஆட்டோ, வியூவர்ஸ் சாய்ஸ் கார் ஆப் தி இயர் உள்ளிட்டவற்றை வென்றுள்ளது. 1.2 லிட்டர் பியூர்டெக் என்ஜினைக் கொண்டுள்ள இந்த மாடல் எரிபொருள் சிக்கனமானது.

ஒரு லிட்டருக்கு 19.88 கி.மீ. தூரம் சோதனை ஓட்டத்தில் ஒடியுள்ளது. ஆட்டோமேடிக் கியர் வசதி கொண்டது. அதிக இடவசதி, பாதுகாப்பான பயணத்துக்கு ஏர்பேக், ஏ.பி.எஸ். பிரேக்கிங், 26 செ.மீ. தொடு திரை இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே இணைப்பு வசதி, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் உள்ளிட்ட வசதிகளைக் கொண்டது.