ஆற்காட்டை அடுத்த புதுப்பாடி ஜி.எம். நகர் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் (வயது 40), கூலித் தொழிலாளி, இவரது வீடு ஓலையினால் கட்டப்பட்டுள்ளது. இந்த நிலை யில் நேற்று ஏற்பட்ட மின் கசிவு காரணமாக வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு வீடு முழுவதும் எரிந்தது.

இது குறித்து தகவல் அறிந்த ஆற்காடு தீயணைப்பு துறையி னர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்ததீவிபத்தில் வீட்டிலிருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது. இது குறித்து ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.