அரக்கோணத்தை அடுத்த நாரணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி (வயது 50), விவசாயி. இவர் நிலப்பிரச்சினை காரணமாக கடந்த அக்டோபர் மாதம் 8-ந் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார். 

இந்த வழக்கு தொடர்பாக அவரது சகோதரியின் மகன் அஜித்(22) என்பவரை அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேல் தலைமையிலான போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

மேலும், இவரின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். 

அதன்பேரில் அஜித்தை குண்டர் தடுப்பு சட்டத் தில் கைது செய்ய கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார்.