அரக்கோணத்தை அடுத்த நாரணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சம்பத் (வயது 39), கட்டிட மேஸ்திரி. இவர் கடந்த 17-ந்தேதி குடிபோதையில் தனது வீட்டின் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சம்பத் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.