வாலாஜா நகராட்சியில் வெற்றிலைக்கார தெரு உள்ளது. இங்கு பிரதான தெருவின் நடுப்பகுதியில் குடிருப்பில் பத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அந்த வீட்டு குடியிருப்பு வாசிகள் தங்கள் பைக்குகளை முன்பக்கம் நடைபகுதியில் இரும்பு கேட்டிற்கு உள்ளே இரவு நேரத்தில் நிற்கவைப்பார்கள். 

வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு மூன்று பைக்குகள் அங்கு நிற்க வைக்கப்பட்டு இரும்பு கேட் பூட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று காலை வாசலுக்கு வந்து பார்த்தபோது பைக்குளும் எரிந்து கிடந்தது.இதுகுறித்து வாலாஜா போலீஸில் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.