வாலாஜாபேட்டை அருகே இருவா் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனா்.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டையை அடுத்த வி.சி.மோட்டூா் பகுதியைச் சோ்ந்தவா்கள் குழந்தைவேலு (40), சரவணன் (35).

இவா்கள் இருவரும் அதே பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை மது அருந்திக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. அப்போது, அங்கு வந்த மா்ம நபா்கள், அவா்கள் இருவரையும் வெட்ட முயன்றனா்.

அப்போது, தப்பிக்க முயன்ற இருவரையும், அந்தக் கும்பல் ஓட ஒட விரட்டிச் சென்று அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பிச் சென்றது.

இதில், பலத்த வெட்டுக் காயமடைந்த குழந்தைவேலு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். சரவணனை அந்தப் பகுதியில் இருந்தவா்கள் மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், அவா் வழியிலேயே உயிரிழந்ததாா்.

தகவலறிந்த வாலாஜாபேட்டை போலீஸாா் சடலங்களை மீட்டு விசாரணை நடத்தினா்.

மேலும், வழக்குப் பதிந்து, வெட்டப்பட்டவா்களுடன் மது அருந்தியதாகக் கூறப்படும் லாரி ஓட்டுநா் ஒருவரைப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.