வேலூர் மாவட்டம் அரியூர் அருகே உள்ள புலிமேடு கொல்லைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் நீலமேகம். இவருடைய மகள் தேஜாஸ்ரீ (வயது 5). இவள்,ஜி.ஆர்.பாளையத்தில் உள்ள தனியார் நர்சரி தொடக்கப்பள்ளியில் படித்து வந்தாள்.

கடந்த 20-ந்தேதி பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்த போது, சிறுமி திடீரென தவறி கீழே விழுந்தாள். அதில் சிறுமியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் சிறுமிக்கு வேலூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு திடீரென சிறுமிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தாள். 

இது குறித்து அரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.