வாலாஜா அடுத்த வீ.சி.மோட்டூர் பகுதியில் கடந்த ஜனவரி 1ம் தேதி மெக்கானிக் குழந்தை வேல் (32), அதே பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் சரவணன் (35) ஆகியோர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். 
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, திருத்தணி அடுத்த டி.புதூர் கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் நிர்மல்குமார்(25) என்பவரை ஜனவரி 3ம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கு வாலாஜா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இரட்டை கொலை வழக்கில் நிர்மல் குமாரை குண்டர் சட்டத் தின் கீழ் கைது செய்ய எஸ்பி கிரண் ஸ்ருதி கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து, அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் வளர்மதி நேற்று உத்தரவிட்டார்.

கலெக்டர் வளர்மதி, எஸ்பி கிரண் ஸ்ருதி ஆகிய இருவரும் பதவியேற்று 2 நாட்களில் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.