"வீட்டுக்குள்ள நகம் வெட்டினா... வீடு விளங்காது"

நமது உடலின் வலிமையான இடங்களில் ஒன்று நகங்களாகும். அதேசமயம் நமது உடலுக்கும் பாக்டீரியாக்கள் நுழைய பெரும்பாலும் நுழைவாயிலாக இருப்பது நகம்தான். எனவே நகங்களை சுத்தமாகவும், அழகாகவும் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். 

அந்த காலத்தில் மின்சாரம் இல்லாத காரணத்தினால் அரிக்கேன் மற்றும் அகல் விளக்கு பயன்படுத்தி வந்தார்கள். இரவு நேரத்தில் குப்பை கொட்டினால் இருட்டில் தேவையான பொருள் ஏதும் குப்பையில் கலந்து போக வாய்ப்புள்ளது.

எனவே விடிந்ததும் நன்றாக குப்பை கூடையை பார்த்து விட்டு கொட்டுவார்கள். மின்சாரம் சவுரியாமாக பயன்படுத்தும் இந்த காலத்திலும் அதையே நம் மக்கள் பின்பற்றுகிறார்கள்.

இரவில் நகம் வெட்ட கூடாது, தலை வார கூடாது, ஊசி வாங்க கூடாது என்பதற்கும் இதுவே காராணம். உணவு பொருளில் இவைகள் தெரியாமல் கலந்து விட்டால் ஆபத்து இல்லையா அதான்.