திருவலத்தை அடுத்த ஏரந்தாங்கல் குழுக்கரை தெருவை சேர்ந்தவர் பழனி(வயது 50). விவசாயி இவர் வீட்டை பூட்டிக்கோண்டு காலை 10 மணி அளவில் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். 

பின்னர்மதியம் 2 1/2மணி அளவில் வீட்டிற்கு வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. பீரோவில் இருந்த 11 பவுன் நகை, ரூ. 25 ஆயிரம் உள்ளிட்டவற்றை காணவில்லை. மர்ம நபர்கள் நகை, பணத்தை திருடிச்சென்றது தெரிய வந்தது. 

இதுகுறித்து திருவலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மனோகர் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று விசாரனண மேற்கொண்டனர். 

மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.