ராணிப்பேட்டை அருகே உள்ள லாலாபேட்டை பகுதியை சேர்ந்தவர் சுந்தரேசன் (வயது 48). தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். 

இவரது 2 மகள்கள் வாலாஜாவில் உள்ள கல்லூரியில் படித்து வந்தனர். அவர்கள் கல்லூரியில் இருந்து வரும் பொழுது லாலாபேட்டையை சேர்ந்த அஜீத், சரண் ஆகிய 2 வாலிபர்கள் கிண்டல் செய்துள்ளனர். 

இதை மாணவிகளின் தந்தை சுந்தரேசன் தட்டி கேட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் சுந்தரேசனை கத்தியால் வெட்டியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து 2 வாலிபர்களையும் தேடி வந்தனர். இந்த நிலையில் அஜீத், சரண் ஆகிய 2 வாலிபர்களும் நேற்று திருவள்ளூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.