ராணிப்பேட்டை மாவட்டம் லாலாப்பேட்டையில் தனது கல்லூரி பயிலும் மகள்களைக் கிண்டல் செய்ததை தட்டிக் கேட்ட தந்தையை இருவர் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர்.

வாலாஜாபேட்டையிலுள்ள அரசு கல்லூரியில் படித்து வரும் சுந்தரேசனின் இரு மகள்களையும் வழிமறித்து அதே பகுதியைச் சேர்ந்த அஜித், சரண் என இருவர் கிண்டல் செய்ததாகவும், இதை தட்டிக் கேட்ட சுந்தரேசன் அவரது மனைவி என இருவரிடமும் தகராறு செய்ததாகவும் கூறப்படும் நிலையில், தகராறு முற்றி அந்த இளைஞர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் தாக்கியதில் சுந்தரேசன் படுகாயமடைந்தார்.
மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சுந்தரேசன் இன்று உயிரிழந்த நிலையில் கொலை வழக்காக பதிவு செய்த சிப்காட் போலீசார் தலைமறைவான குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.