தமிழகத்தில் நடுநிலைப் பள்ளிகள் அடுத்த வாரம் முதல் திறக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் 1 முதல் 8 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் '6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி பள்ளிகள் திறப்பது பற்றிய ஆலோசனை அறிக்கையை நாளை முதலமைச்சரிடம் சமர்பிக்க உள்ளோம்.' என்றார்.
இந்த ஆலேசானை கூட்டத்தில், தமிழகத்தில் நடுநிலை பள்ளிகள் அடுத்த வாரம் திறக்கலாம் என்று திட்டமிட்டுள்ளனர். முதலில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளில் வகுப்புகள் திறக்கப்படுகிறது. அதன்பின் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை திறக்கப்படலாம் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் மாணவர்களை சுழற்சி முறையில் பள்ளிகளுக்கு அழைப்பது, இடைவெளி விட்டு அமர வைப்பதில் ஏற்படும் சிக்கல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.