ராணிப்பேட்டை ரத்தனகிரி அடுத்த அரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அசத்துல்லா இவர் தனியார் தோல் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார் இவருக்கு நஸ்ரின் பானு என்ற மனைவியும் ஆர்த்திகா தாஸின் , ஆகிலா தாசின் இரண்டு மகள்களும் உள்ளனர்.
இந்நிலையில் ஆர்த்திகா தாசின் இவர் ரத்தனகிரி பகிரதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்திய அளவில் ஏபிஜே அப்துல் கலாம் டிரஸ்ட் பவுண்டேஷன் மூலம் அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு கட்டுரை போட்டி, பேச்சு போட்டி போன்றவை இராமேஸ்வரத்தில் நடைபெற்றது. இதில் ஆர்த்திகா தாசின் பேச்சு போட்டியில் கலந்துகொண்டு சிறந்து விளங்கி இரண்டாம் பரிசை பெற்றார். இதனால் மாணவி ஆர்த்திகா தாஸின் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட அப்துல் கலாம் ட்ரஸ்ட் பார் பியூட்சர் இந்தியா நிர்வாகிகள் ஆகியோர் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அப்பொழுது பேசிய மாவட்ட ஆட்சியர் மென்மேலும் வளர்ந்து எதிர்காலத்தில் சிறந்த விளங்க வாழ்த்து கூறினார். ராணிப்பேட்டை மாவட்ட அப்துல் கலாம் டிரஸ்ட் பார் ப்யூச்சர் இந்தியா மூலம் மாணவிக்கு பள்ளி படிப்பு மற்றும் அனைத்து உதவிகளை செய்து வருவதாக தெரிவித்தனர்.